ஜகமே தந்திரம் படத்தின் புரோமோஷன் வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இந்தப் படம் நேரடியாக வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரையும் வைத்து ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் வாணி போஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரமுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஊரடங்கு புறப்படுவதற்கு முன்பு வரை பரபரப்பாக நடைபெற்றது.
மேலும் இந்த படத்திற்காக துருவ் விக்ரம் தன்னுடைய உடல் எடையை பயங்கரமாக ஏற்றியுள்ளார். இதற்கான புகைப்படங்கள் கூட வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. சமீபத்தில் வாணி போஜன் ஒரு பேட்டியில் இது ஒரு ஆக்ஷன் கலந்த காதல் திரைப்படம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
என்னுடைய ஜகமே தந்திரம் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்ட கார்த்திக் சுப்புராஜ் சீயான் 60 படம் 50 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது என்ற ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
இதனை விக்ரம் ரசிகர்களும் எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு இந்த ஒரு அப்டேட் போதும் என இணையத்தில் வைரலாகி வருகின்றனர். விக்ரமும் ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
