தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி என்றாலே தனுஷ் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் சினிமா ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான். அந்தளவுக்கு வெற்றிகரமான கூட்டணியாக வலம் வருகின்றனர்.
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் பல படங்கள் வெளிவந்தாலும் வடசென்னை படத்திற்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஏற்கனவே வட சென்னை படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனக் கூறினர்.
வட சென்னை முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகமான அன்புவின் எழுச்சி தற்போது வரை தொடங்கப்படாமல் இருக்கிறது. அதற்கான காரணம் கேட்டால் மிகப்பெரிய செலவாகும் என வெற்றிமாறன் கூறிவிட்டதால் கிடப்பில் கிடக்கிறது.
இது ஒருபுறமிருக்க வெற்றிமாறன் வட சென்னை படத்தில் ஒரு சிறிய மிஸ்டேக் ஒன்றை செய்துள்ளார். படத்தின் கதையை 2003 ஆம் ஆண்டு நடைபெறுவது போல அமைந்திருக்கும்.
வடசென்னை படத்தில் ஒரு காட்சியில் தனுஷ் தன்னுடைய ஏரியா குழந்தைகளுக்கு கேரம் போர்டு எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது போல எடுக்கப்பட்டிருக்கும்.
அதில் ஒரு சிறுவன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டி ஷர்ட்டை அணிந்திருப்பான். ஐபிஎல் 2007ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படை கூட இல்லாமல் வெற்றிமாறன் எப்படி இவ்வளவு கவனக்குறைவாக இருந்தார்? என நெட்டிசன்கள் கேள்விமேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.