மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா வாழ்க்கையில் MGR ரையும் என்பதையும் தாண்டி ஒரு நடிகர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் என்ற ரகசியம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி வருகிறது.
திருமணமாகாமலேயே எம்ஜிஆருடன் வாழ்ந்து வந்தவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எம்ஜிஆர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அரசியலுக்கு வந்து பின் இந்திய அரசியலையே ஆட்டிப் பார்த்தவர்.
ஒருமுறை ஜெயலலிதாவுக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் வந்ததாக தெரிகிறது. எம்ஜிஆர் ஜெயலலிதாவை படங்களில் நடிக்கக் கூடாது எனவும், முக்கியமாக மற்ற நடிகர்களுடன் நெருக்கம் காட்ட கூடாது எனவும் கூறியுள்ளார்.
ஆனால் எப்போதுமே படித்த பெண் என்கிற அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாம். இதனால் எம்ஜிஆருடன் வாக்குவாதம் செய்து கொண்டு தொடர்ந்து சில வருடங்கள் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் நடித்தபோது பிரபல தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகி காதலாக தொடர்ந்தது. பின்பு ஏழு வருடங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இத்தனைக்கும் சோபன் பாபுவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவிக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதுகுறித்து ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததற்கு அவரது மனைவி காரணம் இல்லை எனவும், திருமணம் செய்து அவருடைய வாழ்க்கையை சீரழிக்க கூடாது என்பதற்காக திருமணமாகாமலேயே இருவரும் வாழ்ந்து வந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார் ஜெயலலிதா. அதன் பிறகு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து எம்ஜிஆர் வசம் தஞ்சமடைந்து அரசியலில் ஈடுபட்டார் எனவும் கூறுகின்றனர்.
