வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பாலா பட வில்லனுடன் காதலில் விழுந்த பாக்கியலட்சுமி சீரியல் ஜெனிபர்.. ரகசியமாக நடந்த திருமணம்

விஜய் டிவியின் முக்கியமான டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றும் சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாலா படத்தின் வில்லன் மற்றும் தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷ்சை காதலித்ததாகவும், நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனிபர் (எ) திவ்யா.

ஆனால் சில மாதங்களில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் பிரிந்து விட்டதாகவும் ஜெனிபர் (எ) திவ்யா தெரிவித்திருந்தார். அதற்குப் பின்னர் கடந்த ஆண்டு ஆர்கே சுரேஷிற்கு ரகசியமாக திருமணம் நடந்தது. இதில் 15 பேர் தான் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் அது கொரோனா காலகட்டம் என்பதால் யாரையும் அழைக்க வில்லையா.? இல்லை ரகசியமாக நடைபெற்ற திருமணம் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆர்கே சுரேஷ் தமிழ் சினிமாவில் தாரை தப்பட்டை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மருது என்ற படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து இருந்த ரோலக்ஸ் பாண்டி என்ற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

rk-suresh
rk-suresh

ஜெனிபர் (எ) திவ்யகணேஷ் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் மனம் ஒத்து போய் பிரிந்துவிட்டனர். தற்போது ஆர்கே சுரேஷ் சினிமா மட்டுமில்லாமல் அரசியலும் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News