பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் தான் சௌந்தர்யா என்ற கதாபாத்திரம். இவர் சீரியலுக்கு முன்னதாக ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் நடித்தவர். கள்ளனும் போலீசும் என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி எங்க வீட்டு வேலன், இதய நாயகன், பொண்டாட்டியே தெய்வம், டூயட், எல்லாமே என் ராசாதான் என பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக 2009ஆம் ஆண்டு யாவரும் நலம் என்ற படத்தில் சீரியல் நடிகையாக நடித்திருப்பார். சினிமாவிலிருந்து ஒரு அங்கீகாரம் கிடைக்காததால் சீரியலுக்கு சென்று விட்டார்.
20-க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்தவர் தான் ரூபா ஸ்ரீ. தற்போது விஜய் டிவியில் பிரபலமான பாரதிகண்ணம்மா, ராஜா ராணி சீசன்2 போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் 26 வருடங்களுக்கு முன்பு பொண்டாட்டியே தெய்வம் என்ற படத்தில் இளம் வயதில் கவர்ச்சியான உடை அணிந்து சில காட்சிகள் நடித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் மட்டும்தான் குடும்ப குத்து விளக்கா, இளம் வயதில் கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கீங்களே என்பது போன்று கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.