தலைவி படத்திற்கு வந்த புதிய பிரச்சனை.. ஆதரவு கொடுப்பாரா ஸ்டாலின்

பாலிவுட் குயின் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தலைவி. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. ஹிந்தி டிரைலருக்கு 21 மில்லியன், தமிழ் ட்ரெய்லருக்கு 14 மில்லியன் மற்றும் தெலுங்கு டிரைலருக்கு 5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பாலிவுட்டில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பல்வேறு விதமான சாதனைகளை படைத்துள்ளன. அங்கு கங்கனா ரனாவத் ரசிகர்கள் பலரும் குயின் ஆஃப் பாலிவுட் என்று தான் அழைப்பார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தலைவி படம் திரையரங்கில் வெளியாகாமல் காத்திருக்கிறது. ஆனால் இப்படத்தின் OTT உரிமையை தமிழில் அமேசான் கைப்பற்றியுள்ளது. ஹிந்தியில் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. அதனால் இப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாகும் என பலரும் கூறினர்.

#thalaivi-cinemapettai
#thalaivi-cinemapettai

ஆனால் படக்குழு OTT உரிமை கைப்பற்றி உள்ளது உண்மைதான். ஆனால் படம் திரையரங்கில் வெளியான பிறகுதான் OTTதளத்தில் வெளியிட வேண்டும் என ஒப்பந்தம் போட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் டீசரை பார்க்கும் போது எந்த ஒரு அரசியல்வாதிகளைப் பற்றியும் எதிர்மறையாக விமர்சனம் செய்யாமல் இருப்பது தெரிகிறது.

ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து உள்ளதால் இப்படத்தினை வெளியிட ஆளுங்கட்சி சம்மதிக்கமா என்பது சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெளிப்படுத்தும் வகையில் இப்படம் இருப்பதால் ஆளுங்கட்சி இப்படத்தினை தங்களைப் பற்றி ஏதாவது எதிர்மறையான காட்சிகள் இருக்கிறதா என்பதை பார்த்த பிறகுதான் படத்தை வெளியிட சம்மதிப்பார்கள் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தினை ஸ்டாலின் வெளியிட ஒத்துழைப்பாரா என்பதும் சந்தேகமாக உள்ளது என கூறியுள்ளனர். ஆனால் இப்படம் வெளியானால் கண்டிப்பாக வெற்றி பெறும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.