இந்திய சினிமாவில் பல சரித்திர படங்கள் வந்திருந்தாலும் பாகுபலி படங்களுக்கு முக்கிய இடம் உண்டு. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக படமாக அமைந்தது.
இந்த படங்களுக்காக பல வருடங்கள் உடல் எடையை ஏற்றி இறக்கி அந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கஷ்டப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பிரபாஸ், ராணா போன்றோரை பெண்டு நிமிர்த்தி விட்டார் ராஜமௌலி.
உழைப்புக்கேற்ற ஊதியமாக பாகுபலி படம் பெரிய அளவில் வசூல் செய்து இதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவும் மிஞ்ச முடியாது வசூல் சாதனையை உருவாக்கியுள்ளது. அதன்பிறகு ராஜமௌலி சரித்திரப் படத்தில் நடிக்க கேட்டாலும் பிரபாஸ் பெரும்பாலும் வேண்டாம் என்றே கூறி வந்தார்.
ஆனால் தற்போது ஒரு இயக்குனர் பாகுபலியை விட பிரம்மாண்டமான சரித்திர கதை ஒன்று சொன்னதைக் கேட்ட பிரபாஸ் உடனடியாக இந்த படத்தை தொடங்கலாம் என பச்சை கொடி காட்டி விட்டாராம்.
அவர் வேறு யாரும் இல்லை. கன்னட சினிமாவை இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் என்பவர் தான். தற்போது இவர் பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தின் இடையில் அடுத்த சரித்திர படத்திற்கான கதையை கூறியதாகவும், பிரபாஸுக்கு கதை மிகவும் பிடித்துள்ளதால் அந்த படம் பாகுபலியை விட அதிக பொருட்செலவில் தயாராக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
