பெரும்பாலும் சினிமாவை பொருத்தவரை அந்தந்த மொழி நடிகர்களை தவிர மற்ற மொழிகளிலிருந்து தான் பெரும்பாலும் நடிப்பார்கள். அப்படி நடிப்பவர்களுக்கு அந்த அந்த ஊரைச் சேர்ந்த சில நபர்கள் ஏன் சில சமயம் ஹீரோக்கள் கூட டப் பண்ணி கொடுப்பார்கள்.
அந்த வகையில் விக்ரம் பிரபல நடிகர்கள் இருவருக்கும் ஒரே படத்தில் டப் செய்து மிரட்டி உள்ளார். பிரபுதேவா, அப்பாஸ், ரம்பா, சிம்ரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் விஐபி. 1997 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இந்த படத்தை சபாபதி என்பவர் இயக்கியிருந்தார்.
ஆள்மாறாட்ட கதையில் மிகவும் சுவாரசியமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற மயிலு மயிலு மயிலம்மா பாடல் இன்றும் ரசிகர்களின் பேவரைட்.
இந்நிலையில் நடிகர் விக்ரம், பிரபு தேவா மற்றும் அப்பாஸ் ஆகிய இருவருக்கும் இந்த படத்தில் வெவ்வேறு வித்தியாசமான குரலில் டப்பிங் செய்துள்ளார். சேது படத்திற்கு பிறகுதான் விக்ரமின் படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது.
அதற்கு முன் டப்பிங் பணிகளில் அதிகம் ஈடுபட்டுள்ளாராம் விக்ரம். அதில் கிடைத்த வாய்ப்புதான் விஐபி படத்தில் டப்பிங் பேசியது. அப்பாஸின் டப்பிங் குரலுக்காக அவர் வாங்கிய சம்பளம் 5,000 ரூபாய் தான்.
தற்போது விக்ரம் தமிழ் சினிமாவில் மாபெரும் கலைஞனாக உருவெடுத்துள்ளார். விக்ரம் அவ்வப்போது மிமிக்கிரி கூட செய்வார் என்பது அனைவருக்கும் தெரியாத விஷயம் ஆகும். விக்ரமின் இந்த அசுர வளர்ச்சியால் அதே தயாரிப்பு நிறுவனத்திடம் தெய்வத்திருமகள் படத்திற்காக 5 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார்.