விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் விரைவில் உருவாக்கப் போவதும் அதில் சல்மான்கான் ஹீரோவாக நடிக்க இருப்பதும் ஏற்கனவே வெளிவந்த தகவல்.
பான் இந்தியா படமாக வெளியான ஒரு படத்தை ரீமேக் செய்வது இதுதான் முதல் முறை. மாஸ்டர் படம் தான் விஜய்யின் முதல் பான் இந்தியா படமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தாலும் பாலிவுட்டில் நினைத்த அளவுக்கு படம் செலவில்லை. இருந்தாலும் சமீபத்தில் டிவியில் பிரிமியர் ஒளிபரப்பு செய்யப்பட்டு மிகப்பெரிய பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மாஸ்டர் படத்தை பார்த்த சல்மான் கான் கண்டிப்பாக இந்த படம் தனக்கு ஏற்ற படம்தான் என்று கூறி அந்த படத்தின் ரீமேக் உரிமையை ரகசியமாக வாங்கியுள்ளதாகும், விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகவும் அவரது வட்டாரங்களில் கூறுகின்றனர்.
பெரும்பாலும் தென்னிந்தியாவில் சூப்பர் ஹிட் வெற்றி பெறும் படங்களை பாலிவுட்டில் பிரபுதேவாதான் இயக்கி வந்தார். ஆனால் சமீபத்தில் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கிய ராதே திரைப்படம் ரத்த காவு வாங்கி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இதனால் பிரபுதேவா மீது அப்செட்டில் இருக்கும் சல்மான் கான், புதிய இயக்குனரை போட்டுக்கூட படம் எடுத்துவிடலாம், ஆனால் பிரபுதேவா மட்டும் வேண்டாம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கண்டிஷன் போட்டு விட்டாராம்.