வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

700 கிலோமீட்டர் நடந்தே வந்த ரசிகர்.. அதிர்ச்சியில் உறைந்து போன அஜித் பட வில்லன்

இந்தியளவில் கொரோனா மக்களை புரட்டி எடுத்து வருகிறது, மக்களுக்காக இறங்கி வேலை பார்க்கும் சினிமா பிரபலங்களுக்கு ஒரு புறம் வாழ்த்துக்கள் குவிந்து தான் வருகின்றன.

கடந்த வருடம் முதல் தற்போது வரை மக்களுக்கு பார்த்து பார்த்து உதவி செய்யும் சோனு சூட் பெருமளவில் ரசிகர்களால் பாராட்டப்படுகிறார். தமிழ் சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்துள்ளார், ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த சிம்புவுடன் ஒஸ்தி, அஜித்துடன் ராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்திரமுகி என தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

இப்படி இருக்க தீவிர ரசிகர் ஒருவர் அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக மும்பையில் இருந்து ஹைதராபாத் வரை வெறும் காலில் நடந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர் சோனு சூட்டை காண வேண்டும் என்பதற்காக நடந்து வந்துள்ளாராம். உடனே அந்த ரசிகரை அழைத்து புகைப்படம் எடுத்து இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.

soonu
soonu

மேலும் அவரின் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடு செய்து வைத்துள்ளார். நம்மள சுத்தி இருக்கவங்கள நம்ம பார்த்துக்கிட்டா, மேல இருக்கிறவன் நம்மள பார்த்துப்பான் என்பது போன்று சோனு சூட் ரசிகர் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.

Trending News