தமிழ் சினிமாவில் பல நடிகைகள் மற்ற மொழியிலிருந்து வந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன அப்படி இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராசி கண்ணா. இப்படத்திற்குப் பிறகு இவருக்கு பெரிய அளவில் தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் வந்தன.
ஆனால் வெற்றியைப் பார்த்த நடிகை சும்மா இருப்பாரா நான் அடித்தால் எனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என கூற இவரை தேடி வந்த பல பட வாய்ப்புகள் தற்போது மற்ற நடிகைகளுக்கு சென்றுவிட்டது. ஆனால் இன்னமும் இவர் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் இருந்தால் மட்டும் கூறுங்கள் என பல இயக்குனர்களிடம் கூறிவருகிறார்.
அப்படி ஒரு சில இயக்குனர்கள் ராசி கண்ணாவிடம் கதையை கூறி வாய்ப்பு வாங்கியுள்ளனர். தற்போது ராசி கண்ணா தமிழில் அரண்மனை 3, துக்ளக் தர்பார் மற்றும் மேதாவி ஆகிய படங்களில் நடித்துள்ளார் விரைவில் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளார் ராசி கண்ணா அதாவது குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்துள்ள ராசி கண்ணாவுக்கு தற்போது பிரபல நடிகரின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது பாகுபலி படத்தின் மூலம் தற்போது வசூலில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ் கிட்டத்தட்ட 500 கோடிகளுக்கு மேல் இவரது படங்கள் வசூல் சாதனை படைத்து வருகின்றன.
பிரம்மாண்ட நடிகர் பிரபாஸ் வைத்து அஸ்வின் நாக் படத்தை இயக்கி வருகிறார் . இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இயக்குனர் ராசி கண்ணாவிடம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தைப் பற்றி கூறியுள்ளார். இது தற்போது ராசி கண்ணாவிற்கு பிடித்துப்போக அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என கூறியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.