சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிரபல நடிகையை ஆம்பள மூஞ்சி என எழுதிய பயில்வான் ரங்கநாதன்.. பின்னாளில் புரட்டி எடுத்த சம்பவம்

சர்ச்சைகளுக்கு பெயர் போன பயில்வான் ரங்கநாதன் ஆரம்பத்திலிருந்தே நடிகைகளை பற்றிய அந்தரங்க விஷயங்களை அதிகம் தன் பத்திரிக்கைகளில் எழுதி பொது இடங்களில் செமையாக திட்டு வாங்கி உள்ளார்.

இப்போதும்கூட யூடியூபில் பயில்வான் ரங்கநாதன் பேட்டிகள் தான் அதிகம் பார்க்கப்படுகிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நடந்த அனைத்து நடிகர் நடிகைகளின் கிசுகிசுக்களையும் ஒன்று விடாமல் சொல்லி வருகிறார்.

கொஞ்சம் மிகைப்படுத்தி சொன்னாலும் இவர் சொல்வது பெரும்பாலும் உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது என்கிறார்கள் ரசிகர்கள். அதற்கு காரணம் அவர் கூறும் எந்த ஒரு கிசுகிசுவுக்கும் இல்லை என யாருமே மறுத்ததில்லை.

அதேபோல் நடிகைகளை அவ்வப்போது உருவ கேலியும் செய்வார். அப்படி சினிமாவுக்கு வந்த புதிதில் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி சுகாசினியை ஆம்பள மூஞ்சி என கலாய்த்து பேப்பரில் போட்டு விட்டாராம்.

இதை மனதில் வைத்துக் கொண்டிருந்த சுகாசினி ஒருமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேரடியாகவே பயில்வான் ரங்கநாதனை சகட்டுமேனிக்கு திட்டியதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்குள்ள தமிழ் சினிமா நடிகை நடிகைகள் அதிகம் கோபத்தில் இருப்பது பயில்வான் ரங்கநாதன் மேல் தான். ஆம், அவர்களது அந்தரங்க விஷயங்களை அப்பட்டமாக தெரிவித்தால் யாருக்குத்தான் கோபம் வராது.

suhasini
suhasini

Trending News