தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவால் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் விஜய்சேதுபதிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் விஜய்சேதுபதியை நடிக்கவைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
ஒரு பக்கம் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்தாலும், மற்றொரு பக்கம் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அப்படி இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் சமீபகாலமாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பது விட குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக உள்ளார். அதுவும் மாஸ்டர் படத்திற்கு பிறகு இவருக்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு ஏன் பாலிவுட் சினிமாவில் ஒரு வெப் சீரிஸ் நடிப்பதற்கு கூட வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால் சினிமாவில் விஜய் சேதுபதி இவ்விடத்திற்கு வருவதற்கு பல வருடங்களாக கஷ்டப்பட்டு உள்ளார். தற்போது மாஸ் நடிகராக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அப்படி நடிகர் விஜய் சேதுபதி தனது நண்பருடன் அப்பாவி போல் இருக்கும் புகைப்படம் தானென்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மேலும் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்சேதுபதியை ஆள் அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் என கூறிவருகின்றனர்.