தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். எப்போதுமே அஜித் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும் அதற்கு காரணம் அவருடைய தனித்துவமான சண்டைக் காட்சிகளும் வித்யாசமான நடிப்பும் தான்.
ஆனால் அஜித் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வலிமை படத்தின் அப்டேட்களை பற்றி எந்த பிரபலங்களும், படக்குழுவினரும் தகவலை பகிர்ந்து கொள்ளாமல் இருந்தனர். இதனால் கோபமடைந்த தல ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்களை எப்படியாவது கொடுங்கள் என தினந்தோறும் சமூகவலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படக்குழு படத்தில் முடிக்க வேண்டிய காட்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு முடிந்து திரையரங்கில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் நேரத்தில் பிரபலம் ஒருவர் அஜித் நடித்துள்ள சண்டை காட்சி பற்றி வெளிப்படையாக கூறியுள்ள விஷயம்தான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது சண்டைக்காட்சிகளில் புகழ்பெற்ற திலீப் சுப்பராயன் இப்படத்தில் தல அஜித் 5 சண்டைக்காட்சிகளில் விளையாண்டு உள்ளதாக கூறியுள்ளார். அதிலும் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் ரசிகர்களை வியப்படையச் செய்யும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இதுவரை எந்த படத்திலும் இடம் பெறாத வித்தியாசமான சண்டை காட்சிகள் இப்படத்தில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கேட்ட அஜித் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இப்படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாகவும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடித்து திரையரங்கில் வெளியிட வேண்டும் எனவும் படக்குழுவினரிடம் கூறிவருகின்றனர்.