அசுரன் படத்தின் வெற்றிக்குப் பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படம் வரும் 18ஆம் தேதி நெற்ஃபிளிக்சு வெளிவர உள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ போன்ற பிரபலங்கள் நடிப்பில் உருவாக்கியுள்ளது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு, தனுஷ் சம்பளம் எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம். தனுஷ் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 15 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் 5 கோடி, சந்தோஷ் நாராயணன் 75 லட்சமும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் கிட்டத்தட்ட 55 கோடி.
இதில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி மற்றும் ராமச்சந்திரா போன்றவர்கள் வாங்கிய கடனுக்கு கொடுத்த வட்டி என்று பார்த்தால் 10 கோடியாம். கிட்டத்தட்ட 65 கோடி வரை மொத்த பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.
இதனை சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். தனுஷ் மிகவும் எதிர்பார்த்தப்படி இந்த படம் தியேட்டரில் வெளிவர வேண்டும் என்பது தான். ஆனால் தயாரிப்பாளரின் நெருக்கடியால் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
