விஜய் டிவி – பிபி ஜோடியில் வனிதாவின் ஜோடி யார் தெரியுமா.? ஜாடிக்கேத்த மூடி தான்!

ஊரடங்கும் முடிந்த பின் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மெல்ல மெல்ல தொடங்கியுள்ளன. இதில் பிக்பாஸ் பிரபலங்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் தலைமையில் நடத்தி வருகின்றனர்.

பிக்பாஸில் கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களை இந்த நிகழ்ச்சியில் இறக்கி விட்டு வேடிக்கை காண்பது தான்.

இந்த வாரம் யாருக்கு யார் ஜோடி என்பது போன்ற ப்ரோமோ ஒன்று வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்த வனிதாவின் ஜோடி யார் என்பது வெளிவந்து உள்ளது. ஜாடிக்கேத்த மூடி என்பது போன்று வனிதாவிற்கு ஜோடியாக சுரேஷ் சக்கரவர்த்தியை போட்டுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் பொருத்தமான வயதான ஜோடி தான் என்பது போன்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

vanitha-jodi
vanitha-jodi