இப்படி வர காசு எனக்கு வேண்டாம்.. 150 கோடியை உதறித் தள்ளிய பிரபாஸ்

தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறக்கும் பிரபாஸ், இந்திய அளவில் பாகுபலி என்ற படத்தின் மூலம் பிரபலமானார், இவருக்கு அறிமுகம் தேவையில்லை என்று தான் கூறவேண்டும்.

இவர் நடித்த பாகுபலி இரண்டாம் பாகமும் வசூல் ரீதியாக பிரம்மாண்ட சாதனை படைத்தது. அதற்குப்பின் சகோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த வருடம் ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

பிரபாஸ் அசுர வளர்ச்சியை பார்த்து இந்திய அளவில் இருக்கும் நிறுவனங்கள் இவரை அணுகி விளம்பரத்தில் நடிக்கும் படி கேட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் மட்டும் சோப்பு, மின்னணுப் பொருட்கள், காலணிகள், ஹெல்த் டிரிங்க்ஸ், ஆடை என்று ஏராளமான விளம்பர வாய்ப்புகள் வந்துள்ளது. ஆனால் இவர் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம்.

விளம்பரங்கள் மூலம் பல நெகடிவ் விமர்சனங்கள் வரும் என்று நடிக்க மறுத்து விட்டாராம். இதனால் கிட்டத்தட்ட 150 கோடி வரை சம்பளம் கிடைத்திருக்குமாம்.

சமீபத்தில் கால்பந்து வீரர் ரொனால்டோ கோகோ கோலாவை வேண்டாம் என்று ஒதுக்கி தண்ணீரை குடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் அந்த நிறுவனத்திற்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டமானது குறிப்பிடத்தக்கது.

adipurush-prabhas
adipurush-prabhas