வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிரபல வாரிசு நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி.. மாஸ் பண்றீங்க பாஸ்!

கன்னட திரையுலகின் தல யஷ் நாயகனாக நடித்து 2018ல் வெளியான திரைப்படம் “கே.ஜி.எஃப்” மாஸ் ஆக்சன் படமான கே.ஜி.எஃப் கன்னடம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாள ரசிகர்களாலும் வெகுவாய் ரசிக்கப்பட்டு வெற்றி நடை போட்ட திரைப்படம்.

அதனை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அதன் இரண்டாம் பாகத்தில் பிசியாகவிட்டார்.

இப்போது இரண்டாம் பாகம் முடிவு நிலைக்கு வந்ததை அடுத்து தெலுங்கு திரையுலக மாஸ் ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக வைத்து ஒரு பிரம்மாண்ட பட்ஜெட் படத்திற்கு தயாராகி வருகிறார்.

அந்த படத்திற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் என்.டி.ஆரின் வில்லனாக களம் காண்கிறார்.

மக்கள் செல்வன் ஏற்கனவே சைரா நரசிம்மா படத்தில் சிரஞ்சீவிக்கு நண்பராக நடித்தை பார்த்து நடிப்பில் விழுந்த பிரசாந்த் நீல் கால்ஷீட் தொடர்பாக வி.ஜே.எஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்தி அதற்காக வி.ஜே.எஸ்ஸை ஒப்புக்கெள்ளவும் செய்து விட்டாராம்.

vijay sethpathi sudeep

Trending News