துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை என வரிசையாக நடித்து வந்தவர் தனுஷ். 3, மயக்கம் என்ன என அவரின் நடிப்புத் திறமையை வெளிக்காண்பித்த தனுஷ் தமிழ் திரையுலகின் மாஸ் ஹீரோவாக வலம்வருகிறார்.
நடிகராக மட்டுமன்றி பாடகர் பாடலாசிரியர் இயக்குனர் வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்ட நடிகர் தனுஷ். கஸ்தூரி ராஜா வின் மகன் செல்லராகவன் தம்பி என்று அவர் சொந்தங்களை வைத்தே அடையாளம் காட்டப்பட்டிருந்த தனுஷ்.
ஒரு கட்டத்தில் தனது திறமையை வளர்த்துக்கொண்டு கதாப்பாத்திரங்களுக்கு வலுசேர்க்கும் கதைகளை தேர்ந்து நடித்தார் இப்போது எல்லோருக்கும் இவர் அடையாளமாகினார். தனுஷின் பல படங்களை தமிழ் கடந்து மாற்று மொழி ரசிகர்களாலும் ரசிக்ப்பட்டது.
சமீபத்தில் வெளியான கர்ணன். தனுஷின் எதார்த்த நடிப்பால் எட்டாத உயரம் எட்டியது. இப்போது அவரின் 44வது படமான பெயரிடப்படாத மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் தயாராகிறது. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தான் இப்படத்தை தயாரிக்கிறது என்றும் படக்குழு செய்தி.
தனுஷ் தனது அடுத்த படத்தில் செல்வராகவனுடன் இணைவார் என எதிர்பார்த்த நிலையில் வேற இயக்குனருடன் இணைவது பெரிய ஆச்சர்யம்தாம்.