விஜய், முருகதாஸ் கூட்டணி என்றாலே இன்று ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கெல்லாம் அச்சாரம் போட்டது என்னவோ துப்பாக்கி படம் தான். விஜய்யின் கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்ற திரைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று.
அதுவரை ஒரே மாதிரி வழக்கமான கமர்சியல் அம்சங்கள் உள்ள படங்களில் நடித்து வந்த விஜய்யை முதன்முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த பெருமை முருகதாசையே சேரும்.
துப்பாக்கி படத்தின் வெற்றியைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்கு வசூல் சாதனை படைத்த துப்பாக்கி படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன தெரியுமா.
மாலை நேரத்து மழைத்துளி என்பதுதானாம். ஒரு பக்கா ஆக்ஷன் படத்திற்கு இப்படி ஒரு லவ் டைட்டிலை எப்படித்தான் வைத்தாரோ முருகதாஸ். முதலில் டைட்டிலை சொன்னவுடன் விஜய் இது முழுக்க முழுக்க காதல் கதை என்று நினைத்தாராம்.
ஆனால் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை சொல்லிவிட்டு அதற்கு எதற்கு லவ் பட டைட்டில் வைக்க வேண்டும் என முருகதாசிடம் கேட்டதற்கு, வித்தியாசமாக இருக்கும் என கூறினாராம். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என டைட்டிலை மாற்ற சொல்லிவிட்டாராம் விஜய்.
ஒரு மனுஷன் வித்தியாசமாக யோசிக்கலாம், அதுக்குன்னு இவ்வளவு வித்தியாசமாக இருக்கக் கூடாது என்று கூறி கிண்டலடித்துக் கொண்டே டைட்டிலை மாற்ற சொல்லியுள்ளார் விஜய். அதற்கு பிறகு முருகதாஸ் தேடிப் பிடித்த டைட்டில்தான் துப்பாக்கி. இன்று துப்பாக்கி என்ற பெயர் பிராண்ட் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.