இசையமைப்பாளர்கள் தொடர்ந்து ஹீரோக்களான காலகட்டத்தில் திடீரென புதிய ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் சலீம், பிச்சைக்காரன், நான் போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நம்பிக்கை தரும் நாயகனாக மாறினார்.
ஆனால் அதன்பிறகு மாஸ் ஹீரோவாக மாற ஆசைப்பட்டு மண்ணை கவ்வினார். தொடர்ந்து சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் தன்னுடைய பிளஸ் என்ன என்பதை தெரிந்துகொண்டு கொலைகாரன் என்ற படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார்.
அந்த வகையில் அடுத்ததாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம்தான் கோடியில் ஒருவன். மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்தகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.
சம்மர் ரிலீசுக்கு குறி வைக்கப்பட்ட இந்த படம் கொரானா சூழ்நிலையால் தற்போது தள்ளிச் சென்றுள்ளது. இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கியமான விஷயத்தை செய்துள்ளாராம். தமிழ் சினிமாவின் ஸ்டைலிஸ் இயக்குனர் என பெயரெடுத்த கௌதம் மேனன் கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பது பாடுவது என வேறு வேறு பாதைகளில் சென்று விட்டார்.
அதிலும் பெரும்பாலும் கெட்ட வார்த்தை அதிகம் இடம்பெறும் பாடல்களை பாடுவதற்காகவே கவுதம் மேனனை கோலிவுட் வட்டாரம் தேர்ந்தெடுத்து விட்டது போல. அந்த வகையில் முதன்முறையாக விஜய் ஆண்டனி படத்தில் ஸ்லம் ஆந்தம் என்ற பாடலை பாடியுள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களோ, முதலில் துருவநட்சத்திரம் படத்தையும் முடித்து வெளியிடும் வழியை பாருங்கள், அடிக்கடி நீங்கள் இயக்குனர் என்பதையே நாங்கள் சொல்லித் தான் தெரிய வேண்டியிருக்கிறது என்று புலம்புகின்றனர்.