விஷ்ணு விஷால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ஒன்றை 53 வயதில் ரீமேக் செய்தே தீருவேன் என்று அடம்பிடித்த கொண்டிருக்கிறாராம் பிரபல நடிகர். அதுதான் இன்றைய கோலிவுட் ஹாட் டாப்பிக்.
விஷ்ணு விஷால் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் சினிமா வாழ்க்கையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்து தனக்கென ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை உருவாக்கிக் கொள்ளாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் அவர் நடித்த வெற்றிப் படங்களில் மிகவும் முக்கியமானது ராட்சசன். முண்டாசுப்பட்டி படத்தை கொடுத்த ராம்குமார் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம்.

இந்த திரைப்படம் ரீமேக்கான அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது. தெலுங்கில் பெல்லம்கொண்ட சீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் நடித்திருந்தனர். தற்போது மூன்று வருடங்கள் கழித்து ராட்சசன் படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
இந்த படத்தை நான் தான் செய்வேன் என அடம்பிடித்து கொண்டிருக்கிறாராம் 53 வயது அக்ஷய் குமார். இப்படித்தான் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தை ரீமேக் செய்வேன் என வலுக்கட்டாயமாக ரீமேக் செய்து வாங்கிக் கட்டிக்கொண்டார்.

மேலும் விஷ்ணு விஷாலின் இளம் கதாபாத்திரத்தை கொஞ்சம் முதிர்ச்சியடைந்த கதாபாத்திரமாக மாற்றி எடுக்க உள்ளார்களாம். ஆக மொத்தத்தில் தென்னிந்திய சினிமாவை நம்பி ஹிந்தி சினிமா வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமாகி உள்ளது.