தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இன்றைய தேதியில் இந்த இரண்டு நடிகர்களுக்கு தான் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆனால் அஜித்தை விட விஜய் படங்களில் மிகவும் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.
அஜித் படங்கள் பெரும்பாலும் குறித்த நேரத்தில் ரெடியாகி ரிலீஸானதாக சமீபகாலத்தில் வரலாறே இல்லை. அதற்கு காரணம் ஸ்டண்ட் காட்சிகளில் பெரும்பாலும் அவரே நடித்து அடிக்கடி காயம்பட்டு படப்பிடிப்பு தள்ளி சென்றுவிடுகிறது.
அப்படித்தான் வலிமை படத்திலும் அஜித்துக்கு அடிபட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த கொரானா, அது இது என மொத்தமும் வலிமை படத்தை படாதபாடுபடுத்தி தற்போது கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் படம் வெயிட் செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் விஜய் நடிக்கும் படங்களில் அவர் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு காட்சிகள் அமைவதில்லை. இதனாலேயே விறுவிறுப்பாக தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் முடித்து விட்டு அடுத்தடுத்த படங்களை ஆரம்பித்துவிடுகிறார்.
முன்னணி நடிகர்கள் என சொல்லிக் கொண்டிருக்கும் விஜய்-அஜித் ஆகியோருக்கு தாங்கள் உண்மையிலேயே மிகப் பெரிய நடிகர்கள் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதில் விஜய் மாஸ்டர் மூலம் நிரூபித்து விட்டார்.

மக்கள் தியேட்டருக்கு வருவார்களா, மாட்டார்களா என்ற சந்தேகம் இருந்தபோது விஜய்யின் மாஸ்டர் அனைத்து சந்தேகத்தையும் தூள் தூளாக்கிகிவிட்டது. தற்போது அதே சவால் தான் அஜித்தின் வலிமை படத்திற்கும் உள்ளது. மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் அஜித்தின் வலிமை படம் வெளியாகி ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருமா? என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.
