தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் வலிமை. கடைசியாக அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதன்பிறகு இரண்டு வருடங்களாகியும் அஜித்தின் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடத்திற்கு மேலாக உருவாகி வரும் வலிமை படம் கூட இன்னும் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்படாமல் உள்ளது.
இப்படி இருக்கும்போதே வலிமை படம் பாகுபலி செய்த சாதனையை முடிவெடுத்துள்ள விஷயம் தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளத்திலும் விருப்பமான படங்களுக்கான ரேட்டிங் இருக்கும்.
அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த பாகுபலியை தல அஜித்தின் வலிமை படம் முறியடித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. புக் மை ஷோ என்ற டிக்கெட் புக்கிங் தளத்தில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
இந்த தளத்தில் இதற்கு முன்னதாக இந்தியாவில் விருப்பமான படங்களில் லிஸ்டில் சில வருடங்களாகவே அவெஞ்சர்ஸ் என்டு கேம் என்ற படம்தான் 17 இலட்சம் ரேட்டிங் உடன் முதலிடத்தில் உள்ளது. வலிமை படம் ரிலீஸ் ஆக இன்னும் லேட்டானால் இந்த சாதனையும் முறியடிக்கபடும் என்றே தெரிகிறது.

ஆக மொத்தத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் எப்படி இருந்தாலும் வசூல் சாதனை செய்து விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.