தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கவிதா. ஹீரோயின், குணச்சித்திர நடிகை என கிட்டத்தட்ட தென்னிந்திய சினிமாவில் மட்டும் 350 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகையான இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால் இவரது மகன் சிகிச்சை பலனின்றி இரண்டு வாரங்களுக்கு முன்பு இயற்கை எய்தினார்.
அந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த கவிதாவுக்கு மேலுமொரு இடி இறங்கும் செய்தியாக அவரது கணவரும் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இது சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கொரானா பாதிப்பால் பல நடிகர் நடிகைகள் திடீர் திடீரென மரணம் அடைந்த செய்திகள் இப்போது தான் கொஞ்சம் ஒய்ந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமா வட்டாரங்களில் இழப்புகள் தொடர ஆரம்பித்துள்ளது.
மகன் போன தூக்கத்தில் இருந்தவருக்கு கணவர் தான் ஆறுதல் என்று இருந்த நிலையில் தற்போது அவரும் இல்லாததால் நடிகை கவிதா என்ன செய்வதென்றே புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.