வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

பட ரிலீசுக்கு முன்னாடியே 8 கோடி லாபம் பார்த்த ஆர்யா.. தலைவன் எப்போதுமே உஷாருதான்!

மகாமுனி படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய ஆர்யாவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் அதிர்ஷ்டமாக இருக்கிறது. சுமாரான டெடி படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது.

இன்னொரு பக்கம் ஆர்யாவை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் பொட்டியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதே ஆர்யாவை தான் சில வருடங்களுக்கு முன்பு ஆர்யாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கூறினார்கள்.

ஆனால் மகாமுனி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்ததன் காரணமாக அடுத்தடுத்த படங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும் இயக்குனர்களும் சிறந்த இயக்குனராக இருக்க வேண்டும் என்பதில் அடமாக இருக்கிறார்.

arya-cinemapettai-01
arya-cinemapettai-01

அப்படி இணைந்த கூட்டணி தான் பா ரஞ்சித், ஆர்யா கூட்டணி. பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவான சார்பட்டா பரம்பரை என்ற படம் முடிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. ஆனால் தியேட்டரில் வெளியிட முடியாத சூழ்நிலை.

இந்நேரத்தில் தான் அமேசான் தளம் சார்பட்டா பரம்பரை படத்தை வாங்கி விட்டதாக தெரிகிறது. 25 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்தப் படத்தை கிட்டத்தட்ட 33 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளதாம் அமேசான் நிறுவனம்.

sarpatta-parambarai-will-direct-release-on-amazon
sarpatta-parambarai-will-direct-release-on-amazon

இதனால் ரிலீசுக்கு முன்னாடியே கையில் 8 கோடி லாபம் பார்த்து விட்டார்கள். மேலும் சேட்டிலைட் உரிமம், ரீமேக் உரிமம் என கணக்கு போட்டு பார்த்தால் குறைந்தது இன்னும் பத்து கோடி வரை லாபம் பார்த்து விடலாம் என செம ஹேப்பியாக இருக்கிறார்களாம் ஆர்யா மற்றும் பா ரஞ்சித். இவர்கள் இருவரும் இணைந்து தான் இந்த படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்தனர் என்பதும் கூடுதல் தகவல்.

- Advertisement -spot_img

Trending News