தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பல பிரபலங்கள் வெப் சீரியலில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். ஏனென்றால் அதில் கிடைக்கும் சம்பளம் இரட்டிப்பாக இருக்கிறதாம்.
வாலி, குஷி படங்களின் இயக்குனரும் நடிகருமானவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தானே இயக்கிய நியூ அன்பே ஆருயிரே படங்களின் மூலம் திரைப்பட நடிகரானவர் எஸ்.ஜே.சூர்யா.
பிறகு தகுந்த கதையமைப்போடு ஸ்கிரிப்டுகளை கொண்டு வந்த பல இயக்குனர்களுக்கும் தான் நடித்து வாய்ப்புகளை தந்தார். பட வாய்ப்புகள் குறையவே சில படங்களில் கதநாயகனாக இல்லாமலும் நடித்து தந்தார் எஸ்.ஜே.
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடித்த ஸ்பைடர் படத்தின் வில்லன் ரோல் மிகச்சரியாக பொறுந்தியது எஸ.ஜே.சூர்யாவுக்கு. இப்படி சினிமாவின் பல முகங்களை கொண்ட எஸ்.ஜே சூர்யா இப்போது வெப் சீரியஸ் ஒன்றில் நடித்து வருகிறாராம்.
தன் நடிப்பால் தியேட்டர் திரைகளை நிறைத்தவர் இனி செல்போன் திரைகளையும் நிறைக்கவிருக்கிறார். வில்லனாக, ஹீரோவாக, இயக்குனராக பல முகங்களைக் கொண்ட SJ சூர்யா வெப் சீரியலிலும் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இவர் நடிக்கவிருக்கும் வெப் சீரியலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
