அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஐ ஓரம்கட்ட போகும் அஜித்தின் வலிமை.. அப்படி என்ன சாதனை படைத்துள்ளது தெரியுமா.?

பாகுபலியை மிஞ்சிய வலிமை, சாதனையை தொடங்கியது எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். அப்டேட் குறித்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை அனைத்து பிரபலங்களிடமும் சமூகவலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.

தற்போது இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண வந்த அஜித் ரசிகர் ஒருவர், வலிமை அப்டேட் என எழுதப்பட்ட பதாகையுடன் மைதானத்தில் அமர்ந்திருந்த போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் கூட தனது இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து, “யாருக்காவது இதற்கு விடை தெரியுமா? இதுவரை நான் பிரிட்டனில் பார்த்த விஷயங்களிலேயே இதுதான் மிகவும் நகைச்சுவையான, அதே நேரம் பதிலளிக்க மிகவும் கடினமான கேள்வி” என்று குறிப்பிட்டுள்ளார்.

valimai book my show
valimai book my show

இப்படியெல்லாம் வலிமை அப்டேட் குறித்து பல நகைச்சுவை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தான் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. படம் வெளிவரும் முன்பே புக்மை ஷோ தளத்தில் வலிமை படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் பாகுபலி சாதனையை வலிமை முறியடித்துள்ளது. அவென்ஜர்ஸ் எண்ட் கேம் படம் 17 லட்சம் எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், வலிமை 2-வது இடத்தை பிடித்துள்ளது. இச்செய்தி ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், மற்றொருபுறம் எப்ப சார் அப்டேட் தருவீங்கனு இன்னும் கேட்டுக் கொண்டுதான் உள்ளனர்.