வடிவேலு சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கு சங்கரும் ஒரு காரணம் தான். தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக வலம் வந்த வடிவேலு தன்னுடைய குணங்களால் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறியிருக்கிறார்.
அரசியல் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் வடிவேலு நடிக்கும் படங்களில் பெரும்பாலும் அவரின் தலையீடு அதிகமாக இருப்பதாக இப்போது வரை பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். இயக்குனர்கள் ஒன்று சொன்னால் வடிவேலு வேறு சொல்வாராம்.
அப்படித்தான் ஷங்கர், வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற படத்தை எடுத்த ஆரம்பத்திலேயே ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து. மேலும் படத்தில் நடிக்கும்போது இயக்குனர் சிம்புதேவனிடம் வடிவேலு பல காட்சிகளை மாற்றச் சொன்னதாக செய்திகள் வெளிவந்தது.
மேலும் அந்த படத்தை தயாரித்த ஷங்கரிடம் பஞ்சாயத்து போக அவரும் வடிவேலுவிடம் பேசி பார்த்துள்ளார். ஆனால் வடிவேலு, நான் சொல்ற மாதிரி படம் எடுத்தா நடித்துக் கொடுக்கிறேன் என கொடுத்த அட்வான்ஸ் உடன் சென்று விட்டார். அட்வான்ஸையும் திருப்பி தரவில்லை, படத்திலும் நடிக்கவில்லை.

இதனால் வழியில்லாமல் நடிகர் சங்கம் படியேறிய ஷங்கர், வடிவேல் இனி படங்களில் நடிக்கக்கூடாது என ரெட் கார்டு வாங்கி விட்டார். கடந்த சில வருடங்களாக சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாத வடிவேலு தன்னுடைய தவறுகளை யோசித்து திருந்திவிட்டதாக கூறுகின்றனர். இந்நிலையில் மீண்டும் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை தொடங்கலாம் என சங்கருக்கு தூதுவிட்டு உள்ளாராம்.
தனக்கு மார்க்கெட் சுத்தமாக இல்லை என்பதை புரிந்து கொண்ட வடிவேலு எப்படியாவது ஷங்கரின் மூலம் விட்டதை மீண்டும் பிடித்து விடலாம் என ஐடியா போட்டுள்ளாராம். இதற்கு முன்னர் வடிவேலு சிம்பு தேவன் கூட்டணியில் வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை தயாரித்ததும் சங்கர் தான்.