சன் டிவி சீரியல்களில் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகிய மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. திருமுருகன் இயக்கியிருந்தார்.
ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை மையமாக வைத்து மெட்டி ஒலி சீரியல் கதை உருவாக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தாய்மார்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றது.
அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்தான் காயத்ரி. இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் சின்ன சின்ன குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் 27 வருடங்களுக்கு முன்னர் அஜித்துடன் நடித்துள்ளார் காயத்ரி.
1994 ஆம் ஆண்டு சுரேஷ் சந்திர மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் ரேவதி நடிப்பில் உருவான திரைப்படம் பாசமலர்கள். இந்த படத்தில் தல அஜித் மற்றும் காயத்ரி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டு தல ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார் காயத்ரி. தல ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார் காயத்ரி.
நீண்ட இடைவெளிக்கு பிறகு காயத்ரி மீண்டும் தற்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார். மேலும் சில சீரியல்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.