வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தமிழில் நவரசா என்ற பெயரில் ஒரு ஆந்தாலஜி படத்தை எடுத்து வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள ஒன்பது இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து 9 படங்களை இயக்கி வெளியிட உள்ளனர். இவை அனைத்தும் குறும்படங்கள் போல தான்.
முன்னதாக நெட்ஃபிக்ஸ் தயாரித்த பாவக் கதைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது மணிரத்னத்தை முன் வைத்து நவரசா என்ற ஆன்தாலஜி படத்தை தயாரித்து வருகிறது.
இதில் சூர்யா மற்றும் கௌதம் மேனன் இருவரும் இணைந்து ஒரு மியூசிகல் படத்தை எடுத்துள்ளனர். அந்த படத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது.
கௌதம் மேனன் மற்றும் சூர்யா இணைந்த இந்த படத்திற்கு “கிட்டார் கம்பி மேலே நின்று” என டைட்டில் வைத்துள்ளனர். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும் இந்த கதையில் சூர்யா ஒரு கிட்டார் வாசிப்பாளராக வருகிறார். ஏற்கனவே வாரணம் ஆயிரம் படத்தில் கிட்டாரை வைத்து எடுக்கப்பட்ட காதல் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அதையே தொடர்ந்து எடுத்துள்ளார்களாம்.
நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள இந்த நவரசா வெப் சீரீஸ் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. சூர்யாவைப் போலவே மேலும் சில முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். மேலும் சில முன்னணி இயக்குனர்களும் இந்த வெப்சீரிஸில் பணியாற்றியுள்ளனர்.