கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதையம்சம் உள்ள படங்கள் நிறைய வருவதால் அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் ஜெயம்ரவி படமும் ரீமேக் செய்யப்படுகிறது.
தெலுங்கில் வெற்றிபெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகராக மாறியவர்தான் ஜெயம் ரவி. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.
இவருடைய நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோமாளி. 90 களில் வாழ்ந்த இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 80 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து பிரம்மிக்க வைத்தது.

தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமும் இதுதான். பிரதீப் ரங்கனதன் என்ற இளம் இயக்குனர் இயக்கியிருந்தார். இந்த படத்தை தன்னுடைய மகன் அர்ஜுன் கபூரை வைத்து ரீமேக் செய்ய உள்ளாராம் போனி கபூர்.
போனி கபூர் தற்போது தென்னிந்திய சினிமாவில் பல நல்ல படங்களை வாங்கி ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலையைச் செய்து வருகிறார். அதைப்போல் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடிக்கும் படங்களை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்து வருகிறார்.

ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய கோமாளி திரைப்படம் தன்னுடைய மகனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் என நம்பி இந்த படத்தை வாங்கியுள்ளாராம் போனி கபூர். ஆனால் வலிமை படத்தைப் பற்றிய செய்தியை மட்டும் வெளியிட மாட்டேன் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.