வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லேடி சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து தள்ளிய சமந்தா.. என்ன காரணம் தெரியுமா.?

போடா போடி படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இருப்பினும் இவர் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தின் மூலமே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள்.

எனவே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்குமாறு சமந்தாவை அனுகியபோது முதலில் தனக்கான முக்கியத்துவம் மிகவும் குறைவாக இருப்பதாக கூறி நடிக்க தயங்கினார். பின்னர், விக் னேஷ் சிவன் அவரது கதாபத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தினார். அதன் பின்னரே சமந்தா இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகை சமந்தா முதன்முறையாக நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இப்படத்தில் அற்புதமாக நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் சேதுபதியுடன் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என கூறியுள்ளார்.

என்ன தான் நடிகைகள் நட்பு பாராட்டி வந்தாலும், படம் என வந்துவிட்டால் ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமை என சண்டையிடுவது வழக்கமான ஒன்று தான். முன்னணி நடிகைகளான இவர்களுக்குள் இதுபோன்ற சண்டைகள் வராமல் இருந்தால் சரிதான்.

Trending News