நான் ஈ, பாகுபலி போன்ற மெகாஹிட் படங்களை இயக்கியவர் ராஜமவுலி. தற்போது ராம்சரன், ஜுனியர் என்.டி.ஆர். அஜய் தேவுகன் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இப்படம் ரிலிசாக உள்ளது. இப்படத்திற்கான கலந்துரையாடலுக்காக டெல்லிக்கு விமானத்தில் வந்திருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.
அவர் விமான நிலையத்தில் உள்ள பிரச்சனை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை தந்திருந்தார். அவர் பதிவிட்ட விடயம் என்னவென்றால் வெளிநாட்டிலிருந்து பயணப்பட்டு வருபவர்களுக்கு பி.சி.ஆர் பார்ம் தருகிறார்கள். ஆனால் அதை வைத்து நிரப்புவதற்கான வசதிகள் இல்லை பலரும் தளங்களிலும் சுவர்களிலும் வைத்து நிரப்பவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் சில மேசைகள் அமைத்தாலே அமோகமாக இருக்கும என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கொரனா பாதிப்புகளை கட்டுப்படுத்த இத்தனை விடயங்களை கடைபிடிக்கும் ஏர்போர்ட் நிர்வாகம் வெளியேறும் பகுதிகளுக்கு அருகில் உள்ள நாய்களை கவனிக்கவில்லை என்றும் இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் இந்தியா பற்றி என்ன நினைப்பார்கள் என்றும் கேட்டிருந்தார்.
இப்படியான பிரபல பதிவுகளுக்கு பிறகேனும் விமான நிலைய நிர்வாகம் ஏதேனும் சரிசெய்யுமா என பார்க்கலாம்.
ஆனால் இதுவரை விமான நிர்வாகம் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை கூடியவிரைவில் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.