கடந்த 2010ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகிய ரன்வீர்சிங், அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள் பட்டியலில் ஒருவராக உள்ளார். பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த ரன்வீர் 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை காதல் திருமணம் செய்து கொண்டார்.
சமீப காலமாக சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கள் சின்னத் திரைக்கு வருவது அதிகரித்துள்ளது. ஹிந்தியில் ஷாருக்கான், சல்மான்கான் தொடங்கி தமிழில் கமல்ஹாசன் என பெரிய ஹீரோக்கள் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். படங்களை விட இது போன்ற டிவி நிகழ்ச்சிகளில் அதிக சம்பளம் கிடைப்பதும் இவர்கள் சின்னத் திரைக்கு வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
தற்போது இந்த வரிசையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் இணையவுள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தி பிக் பிக்சர் என்ற நிகழ்ச்சியை ரன்வீர் சிங் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்நிகழ்ச்சி போட்டியாளர்களின் அறிவு மற்றும் பார்த்ததை நினைவு கொள்ளும் திறன் ஆகியவற்றை சோதிக்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

இந்த நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோ ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசருடன் விரைவில் வரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.