தமிழ் படங்களில் நடித்த இளம் நடிகை ஒருவருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு தற்போது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலைமையில் இருப்பதாக நடிகையின் தோழிகள் கூறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் பச்சை என்கிற காத்து. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் சரண்யா சசி. மலையாள நடிகையான இவர் தமிழை விட மலையாளத்தில் பிசியான நடிகையாக வலம் வந்தார்.
மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இப்படிப்பட்ட சரண்யாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட பதினோரு முறை அறுவை சிகிச்சை செய்து விட்டார்களாம்.
அதற்கு மலையாள திரைப்பட நடிகர் நடிகைகள் பலரும் பணம் கொடுத்து உதவியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு குரானா தொற்று ஏற்பட்டுள்ளது.

விரைவில் குணமடைந்து வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அது கைகூடாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள் நடிகையின் தோழிகள். 27 வயதான சரண்யா சசி தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும் அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருப்பதால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாம். எப்படியாவது இதிலிருந்து மீண்டு வந்துவிடுவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.