தமிழில் முதன்மையான டிவி சேனல்களில் ஸ்டார் விஜயும் அடங்கும். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் வரை எல்லாவற்றிலுமே ஹிட்டடிப்பது வழக்கமாகிறது.
என்னதான் ரியாலிட்டி ஷோக்களை நடத்தினாலும் கமலஹாசன் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ் ” நிகழ்ச்சி போல மக்களிடம் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி வேறு ஏதுமில்லை.
அதற்காகவே அந்த பிக்பாஸ் பிரபலங்களை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்தால் வரவேற்பு கிடைக்கும். அதனால் விஜய் டிவி நிர்வாகம் வித்தியாசமான நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்து பிக்பாஸ் ஜோடிகள் எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்து வருகிறது.
ரம்யா கிருஷ்ணன், நகுல் நடுவராக அமரும் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் தொகுப்பாளராகிறார்.
1.ஷிவானி – சோம் சேகர்
2.கேபிரியல்லா – ஆஜீத்
3.அனிதா – ஷாரிக்
4.நிஷா – தாடி பாலாஜி
5.வனிதா – சுரேஷ் சக்ரவர்த்தி
6.சம்யுக்தா – ஜித்தன் ரமேஷ்
7.ஜூலி – சென்றாயன்
8.பாத்திமா பாபு – மோகன் வைத்யா ஆகியோர் நடனமாடுகிறார்கள்.
இப்படியாக இருந்த இந்த போட்டியிலிருந்து திடீரென விலகிய வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு பிரச்சனைகளை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் முயற்சி செய்கிறவர்களை ஊக்கப்படுத்தவில்லை என்றாலும் உதாசினப்படுத்தாதீர்கள் என்றும் அது ஆணோ பெண்ணோ எல்லோரையும் சமமாக பாருங்கள் என்றும் குறிப்பிடட்டிருந்தார்.
எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு மேக் அப்பை ரம்யா கிருஷ்ணன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது போலவும் அவரை பல்வேறு விதங்களில் காயப்படுத்தி விட்டதாகவும் பெயர் குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தார் வனிதா. “உச்சத்தில் இருப்பவர்கள் உதவுங்கள் உதாசினப்படுத்தாதீர்கள்” என தற்போது ரசிகர்கள் கூறி வருகின்றனர்