இறுதியாக 2019ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. இதனையடுத்து மீண்டும் இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் வலிமை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இருப்பினும் இரண்டு ஆண்டுகளாக இப்படம் குறித்து எந்த ஒரு தகவலையும் படக்குழுவினர் வெளியிட வில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்த ரசிகர்களும் வேறுவழியின்றி அரசியல் தலைவர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரிடமும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். இறுதியாக சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அதன் மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டையும் இந்த மாதத்திற்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, கிளப்ஹவுஸ் டாக்கில் முதல் இன்ட்ரோ பாடல் பற்றி அப்டேட் வெளியிட்டுள்ளார். இது அனைவரையும் ஆட்டம் போட வைப்பதாக இருக்கும் என்றும், இந்த படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்றும் இருப்பதாக கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
ஒரு படத்தோட சிங்கிள் அப்டேட்டுக்காக வருஷக்கணக்கா காத்துக்கிட்டு இருக்காங்க. பில்டப் எல்லாம் நல்லாதான் இருக்கு படம் எப்படி இருக்கும்னு தான் தெரியல….