தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. ஆனால் சமீபகாலமாக சமந்தாவின் புகழனைத்தும் தெலுங்கு பக்கம் தான் உள்ளது. ஏனென்றால் அந்த அளவிற்கு தெலுங்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் சமந்தாவுக்கு குவிந்து வருகின்றன.
முதலில் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி என ஒப்புக் கொண்ட சமந்தா வெற்றி கண்ட பிறகு ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டும்தான் நடிப்பேன் என அனைத்து இயக்குனர்களுக்கும் கட்டளையிட்டார். அதனால் சமந்தாவிற்கு முக்கியமான கதாபாத்திரங்களை கொடுக்க இயக்குனர்கள் முன்வந்தனர்.
என்னதான் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தாலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது முரட்டு காதல் தான். அதனால் தற்போது சமந்தா காதல் படத்தில் நடிப்பதற்கு ஆசையாக இருப்பதாக மேனேஜர் மூலம் தூது விட்டுள்ளார்.

சமீபத்தில் சமந்தா நடிப்பில் அமேசான் இணையதளத்தில் வெளியான ‘தீ ஃபேமிலி மேன்‘ வெப் சீரியஸில் இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இருந்ததாக சர்ச்சையைக் கிளம்பியது. அதனால் படக்குழு அதற்கான விளக்கத்தை கூறி தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு உடான்ஸ் விட்டது.
சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வரும் சமந்தா தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தா பவர வித்தியாசமான உடைகளிலும் விசித்திரமாக போஸ் கொடுத்து வருவதாக கூறி வருகின்றனர்.