தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக முத்திரை பதித்தவர் செல்வராகவன். தற்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
இவருக்கும் கீதாஞ்சலி என்பவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தங்களது திருமண வாழ்க்கை பயணத்தை 3 பிரிவாக பிரித்து புகைப்படங்களாக கீதாஞ்சலி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு புகைப்படமும் வித்தியாசமாக உள்ளதோடு, வித்தியாசமான வாழ்க்கை நிலைகளை படம்பிடித்து காட்டும் விதமாக உள்ளது.
புகைப்படங்களை பதிவிட்டுள்ள கீதாஞ்சலி, “செல்வராகவனுடனான காதல் முன்பும், தற்போதும், எப்போதும் குறையாது என்றும், திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது ஐ லவ் யூ செல்வராகவன்” எனவும் கூறியுள்ளார். மேலும் காதல் உள்ளிட்ட பல்வேறு எமோஜிகளையும் இணைத்துள்ளார்.
அவர், காதல் கொண்டேன் இயக்குனர் மனைவி அல்லவா…