சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சினிமாவுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர் நடிகைகளும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த சட்டத்தை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சினிமாவில் கருத்து சுதந்திரம் இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும். ஒரு படம் தணிக்கை செய்யப்பட்டு வெளியான பிறகும் அந்த படத்திற்கு புகார்கள் அதிகளவில் வந்தால் மீண்டும் தணிக்கை செய்யப்படும் சட்டம்தான் அது.
இது சினிமாவின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் என சமீபத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல நடிகர் நடிகைகளும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இதற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் சூர்யா போட்ட பதிவுக்கு நடிகையும் பாஜக கட்சியின் பிரதிநிதியுமான காயத்ரி ரகுராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவை பங்கமாக கலாய்க்கும் படி ஒரு பதிவை வெளியிட்டு சூர்யா ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது, சமீபகாலமாக வரும் படங்களில் பெரிய அளவு கருத்துக்கள் எதுவும் இல்லை. அதுவும் உங்கள் படங்களில் சுத்தமாக இல்லை. உங்களது படங்களில் நாலு சண்டை காட்சிகள், நான்கு பாடல்கள், இரண்டு மாஸ் ஓபனிங் காட்சிகள், நான்கு சென்டிமென்ட் சீன்கள் தவிர சொல்லிகொள்ளும்படி வேறு எதுவுமே இல்லை.
இந்த மாதிரி படங்கள் நடிக்கும் உங்களுக்கு எதற்கு கருத்து சுதந்திரம் வேண்டும்? என ஓபனாகவே ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து விட்டார். இதனால் கடுப்பான சூர்யா ரசிகர்கள் காயத்ரி ரகுராமனின் சமூக வலைதளப் பக்கங்களில் தங்களது கோபத்தை காட்டி வருகின்றனர்.