விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தற்போது ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”.இதில் சமைப்பதற்கான குக்குகளாக சில பிரபலங்களும் கோமாளிகளாக விஜய் டிவியின் பிரபலங்களும் கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்தனர்.
இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாது பல்வேறு நிகழ்ச்சிகளில் சமயல் கலை நிபுனராக நடுவராக சுவை பார்த்து சரியாக சொல்லும் போட்டியாளராக என பல்வேறு முகங்களில் அறிப்பட்டவர் தாமு என்கிற “தாமோதரன்”.
இவர் சமீபத்தில் தனது பழைய புகைப்படம் ஒன்றை தனது இண்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் “தாமு”.அதில் அவரது மகளும் அவரும் உள்ளனர் அந்த புகைப்படத்தை பார்த்து அவர்தான் என கணிப்பதே மிகப்பெரிய வேலையாக இருக்கும் போல.

இதுபோன்ற புகைப்படங்களை எடுத்து கொடுத்தால் விஜய் டிவி கண்டுபிடிப்பதற்காக ஒரு போட்டி வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்போது இண்ஸ்டா உட்பட பல்வேறு சமூக வலைதளங்களில் தாமு-வின் பழைய போட்டோ வைரலாகி வருகிறது.