இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிடாமல் அந்த படத்தின் மொத்த வியாபாரத்தையும் எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய தொகைக்கு விற்றது இதுதான் முதல்முறை என்கிறது சினிமா வட்டாரம்.
அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு வருடகாலமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் மற்றும் வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனி கபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ள நிலையில் வெளிநாடு செல்ல முடியாமல் படக்குழு தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பே மூன்றாவது முறையாக இதே கூட்டணி இணைந்து புதிய படம் ஒன்றை ஆரம்பித்து விட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் போனிகபூர் அஜித்தின் வலிமை படத்தின் வியாபாரத்தை முடித்து விட்டாராம். வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமலேயே போனி கபூர் வலிமை படத்தை அதனுடைய எதிர்பார்ப்பை வைத்து சுமார் 215 கோடிக்கு வியாபாரம் செய்து விட்டாராம்.
ரஜினியின் 2.o படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய வியாபாரம் படம் வெளியாவதற்கு முன்னரே செய்துள்ளது இதுதான் முதல் முறை. முன்னதாக விஜய்யின் மாஸ்டர் படம் 200 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டாலும் பின்னாளில் கொரானா காரணமாக பிசினஸ் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விரைவில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் உடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என செய்திகள் கிடைத்துள்ளன. ஒரு படம் ஃபர்ஸ்ட் லுக் கூட விடாமல் அதனுடைய எதிர்பார்ப்புக்கு மட்டுமே இவ்வளவு பெரிய வியாபாரம் நடந்திருப்பதை ஆச்சரியமாக பார்க்கிறது இந்திய சினிமா.