மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதை விட அதிக தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய உண்டு. இன்று முன்னணியில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் அதை சந்தித்து விட்டுத்தான் வந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தனுஷ் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றம் கொடுத்த திரைப்படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா. போதாக்குறைக்கு படம் குறித்த தேதியில் ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்தது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு லேட்டாக வந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அப்படியேதான் இருந்தது. தனுஷ் ரசிகர்களும் இந்த படத்தை காண ஆர்வமாக இருந்தனர். ஆனால் படம் வெளியாகி முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டவில்லை என்பது சோகம்தான்.
இத்தனைக்கும் அதற்கு முன்னர் தான் அசுரன் என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்திருந்தார் தனுஷ். கௌதம் மேனன் இயக்கிய படங்களிலேயே என்னை நோக்கி பாயும் தோட்டா படம் படு மொக்கையாக இருந்ததாக கருத்துக்கள் வெளிவந்தன.
இந்நிலையில் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாவதற்கு காரணமாக இருந்த வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உரிமையாளர் ஐசரி கணேஷ் ஏன் அந்த படம் தோல்வி அடைந்தது என்பதை சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கௌதம் மேனன் ஒரு புது முறையை அறிமுகப்படுத்தி வைத்தாராம். அதாவது அவரது படங்களில் அவ்வப்போது வரும் வாய் ஓவர்களை, படம் முழுக்க வைத்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையில் அந்தப்படம் உருவானதாகவும், அதுவே இந்த படத்திற்கு தோல்வியை கொண்டுவரக் காரணமாக அமைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.