சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

முதல்வர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக் கொண்ட பிக்பாஸ் நடிகை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவ்வபோது சைக்கிளிங் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை சாலைகளில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழியில் சந்தித்த பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், அவரிடம் ரிக்வஸ்ட் செய்து செல்ஃபி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

முதல்வருடன் செல்பி எடுத்தது குறித்த தனது அனுபவத்தை பேட்டி ஒன்றில் யாஷிகா கூறியுள்ளார். அதில், “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வார இறுதி நாட்களில் தோழிகளுடன் சைக்கிளிங் செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எனது தோழிகளுடன் மாமல்லபுரத்திலிருந்து கோவளத்திற்கு சைக்கிளிங் சென்ற போதுதான், பாதுகாப்பு படையினர் புடை சூழ முதல்வர் சைக்கிளிங் செய்வதை பார்த்தோம்.

பின்னர் முதல்வரை சந்திக்க விரும்பிய நானும் எனது தோழிகளும் அவர் அருகே சென்று குட் மார்னிங் கூறினோம். எந்தவித பந்தாவும் இல்லாமல் எளிமையாக, கனிவாக பேசினார் . பிறகு நாங்கள் உங்களுடன் புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்டோம். முதல்முறையாக ஸ்டாலினை நேரில் பார்த்ததால், அவருடன் நானும் செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.

yashika anand stalin
yashika anand stalin

ஸ்டாலின் நினைத்திருந்தால் எங்களிடம் பேசாமல் சென்றிருக்க முடியும். ஆனால் அவர் அனைவரிடமும் அன்பு காட்ட நினைக்கிறார். எங்களை சந்தித்ததை போலவே அவர் சைக்கிளிங் சென்ற வழியில் ஏராளமான பொதுமக்களையும் நின்று சந்தித்து பேசியனார். இவரை போல் எல்லா தலைவர்களும் எளிமையாக இருந்தால் மக்கள் எளிதாக அணுக முடியும்” என பாராட்டி தள்ளியுள்ளார் யாஷிகா.

Trending News