பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். அதேபோல், பாலிவுட் நடிகர் ஷாருக் கான், இயக்குனர் கரண் ஜோகர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று நடிகர் தீலிப் குமாரின் மனைவி சைரா பானுவுக்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் தான் நடிகர் ஷாருக்கான் சைரா பானுவுக்கு ஆறுதல் கூறிய புகைப்படம் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் ஷாருக்கானை திட்டி தீர்த்து வருகின்றனர். காரணம் அவர் சன் கிளாஸ் அணிந்து வந்துள்ளார். மேலும் முகக்கவசம் அணியவில்லை, அதேபோல் அவர் அணிந்திருந்த இருக்கமான ஆடைகளால் அவரால் தரையில் உட்காரவே முடியவில்லை.
இதை பார்த்த ரசிகர்கள் சன் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக தான் ஆறுதல் சொல்வீர்களா? இது எல்லாம் போலி விளம்பரம் என கூறி திட்டி தீர்த்து வருகின்றனர். இன்னும் சிலர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரியாதா எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்காக தான் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்று கூறுவார்கள்.