தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று பார்த்தால் தற்போது இரண்டாம் கட்ட நாயகியாகவே நடித்து வருகிறார். மேலும் சோலோ ஹீரோயின் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஒருகாலத்தில் நந்திதா நடித்தால் அந்த படம் வெற்றி பெறும் நம்பிக்கையில் வெற்றி நாயகியாக வலம் வந்தார். நந்திதா நடிப்பில் வெளியான அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என வரிசையாக படங்கள் வெற்றி பெற்றதால் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார்.
ஆனால் அதன்பிறகு கமர்ஷியல் நாயகியாக மாற ஆசைப்பட்டு ஒரு சில படங்களிலேயே மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விட்டார். இப்போதும் தனக்கான ஒரு இடத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் தேடிக் கொண்டிருக்கிறார்.
சமீபகாலமாக நடிகைகள் தங்களுடைய ரசிகர்களுடன் நேரடியாக உரையாட இன்ஸ்டாகிராம் லைவ் என்ற பக்கத்தை பயன்படுத்தி வந்தனர். இதில் தொடர்ந்து ரசிகர்கள் நடிகைகளிடம் வக்கிரமாக பேசுவதும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சமீபத்திய லைவ் வீடியோவில் நந்திதாவிடம் ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று அவருடைய உடல் உறுப்பை மையப்படுத்தி கேள்வி கேட்டுள்ளார். இதனால் கடுப்பான நந்திதா, இந்த கேள்வியை உங்களுடைய அம்மா, அக்கா, தங்கச்சி போன்றோரிடம் கேட்டால் சரியான விடை கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
ஒன்றும் தெரியாதது போல் இருக்கும் நம்ம நந்திதாவா இப்படிப் பேசுவது எனும் அளவுக்கு அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாம் அந்த பதிலடி. இவர் மட்டுமல்ல, சமீபகாலமாக பல நடிகைகளும் இதே மாதிரி மோசமான கேள்விகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.