தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் வலிமை படத்திற்கான மொத்த வேலைகளும் முடிந்து அடுத்தடுத்து ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட உள்ளதாம் படக்குழு.
வலிமை படத்தில் முக்கியமான காட்சிகளாக இருக்கும் என பார்த்து பார்த்து செதுக்கிய காட்சிகள்தான் வெளிநாட்டு காட்சிகள். அங்கு ஆக்சன், சேசிங் என படுபயங்கரமாக படத்தை எடுக்கலாம் என்று திட்டமிட்டாராம் வினோத்.
அதன்படி முதற்கட்ட படப்பிடிப்புக்கு சென்றபோது அஜீத்துக்கு காலில் அடிபட்டு படப்பிடிப்பு தடைபட்டது. அதன் பிறகு தற்போது வரை வெளிநாடுகளில் சென்று படம் எடுக்க முடியாத சூழ்நிலையில் சிக்கி மாட்டிக் கொண்டிருக்கிறது வலிமை.
இந்நிலையில் அங்கே எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை ஹைதராபாத்தில் செட் போட்டு எடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கிறதாம். இன்னும் சில தினங்களில் ஐதராபாத்தில் மொத்தமாக படப்பிடிப்பு முடிவடைந்து விடுமாம்.
அதனைத் தொடர்ந்து வினோத் உடன் கேமராமேன் மற்றும் சிலர் இணைந்து ஐரோப்பா சென்று அங்கு சில இடங்களை படம்பிடித்து வந்து அதை அப்படியே ஹைதராபாத்தில் எடுத்த காட்சிகளுடன் இணைத்து படத்தில் காட்ட உள்ளார்களாம். நம்ம ஊரு கிராபிக்ஸ் பணியாளர்களை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும்.
இந்த காட்சி வெளிநாடுகளில் நேரடியாக படமாக்கப்பட்டால் மட்டும்தான் அது உண்மையான காட்சி போல இருக்கும். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்தால் அதன் நிலைமை என்ன என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். ஹாலிவுட்டில் பெரும்பாலான படங்கள் வெறும் ஒரே அறைக்குள் எடுக்கப்படுவது தான்.
அதன்பிறகு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்து படத்தை பிரமாண்டமாக காட்டி விடுகின்றனர். அதே போன்ற வேலையைத்தான் தற்போது வலிமை படக்குழுவும் செய்யவுள்ளதாம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன என்ன பண்றாங்க பாருங்க என்ற மீம்ஸ் டெம்ப்ளேட்டை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
