தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வெரைட்டியான படங்களைத் தரும் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாலா. இவரது படங்களில் பெரும்பாலும் போதை சம்பந்தப்பட்ட அதை அதிகமாக பயன்படுத்துவது தான் கொஞ்சம் கவலை.
பாலா படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தாலும் அவரது படங்கள் ஏனோ பெரிய அளவு வசூலை ஈட்டிவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருக்கிறது. அது இன்னும் தொடர்கதையாகத்தான் உள்ளது.
இவ்வளவு ஏன் பாலா இயக்கிய நாச்சியார் படம் கூட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. ஆனால் வசூலில் தொய்வு தான். இந்நிலையில் பாலா ஒரு படத்தை எடுத்து அந்த படம் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி நடுத்தெருவுக்கு கொண்டு வந்த கதை தெரியுமா.
பாலாவின் முதல் படம் சேது. விக்ரம் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை கந்தசாமி என்ற தயாரிப்பாளர் தயாரித்திருந்தார். முதலில் இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

சேது படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்துதான் தியேட்டர்களில் பிக்கப் ஆனது என்ற வரலாறு உள்ளது. இந்த படம் பெரியளவு வசூல் செய்யாது என பேச்சுக்கள் வந்ததால் வழியின்றி அநியாயத்திற்கு நஷ்ட விலையில் விற்று விட்டாராம் தயாரிப்பாளர்.
ஆனால் எதிர்பாராத விதமாக இரண்டு வாரங்களுக்கு பிறகு சேது திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பெரிய அளவு வசூலை தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் பெற்றுக் கொடுத்தது. ஆனால் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் பெரிய நஷ்டத்தை சந்தித்து தன்னுடைய வீடு வாசல் எல்லாம் விற்றுவிட்டு வாடகை வீட்டுக்கு குடி போய்விட்டாராம். அதன் பிறகு விக்ரம் மற்றும் பாலா இருவரும் நினைத்திருந்தால் அதே தயாரிப்பாளருக்கு வேறு ஒரு படம் கொடுத்திருக்கலாம். ஆனால் ஏனோ கொடுக்கவில்லை.