செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

சொகுசு பங்களாவுக்கு அடி போடும் பிரபல நடிகை.. நடிகரிடம் ஒரே நச்சரிப்பு

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஒருவர் தற்போது விரைவில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இருப்பதால் அந்த ஏரியாவில் தனக்கென ஒரு சொகுசு பங்களா இருக்க வேண்டும் என விரும்பி பிரபல நடிகரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம்.

தமிழ் நடிகை தான் அவர். ஆனால் தமிழை விட அதிக அளவு தெலுங்கில் அவருக்கு வரவேற்பு கிடைத்ததால் அங்கேயே ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் ஆர்வமாக தான் உள்ளார் அந்த நடிகை.

எந்த ஒரு நடிகையும் திருமணத்திற்கு பிறகு மற்ற நடிகர்களுடன் நெருங்கிய ரொமான்ஸ் மற்றும் கவர்ச்சி காட்டுவதில் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் அம்மணிக்கு அப்படி ஒரு தயக்கமே இல்லை. கணவர் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதால் இஷ்டத்திற்கும் புகுந்து விளையாடி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வெப்சீரிஸ் ஒன்று அவரது கவர்ச்சிக்காகவே பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வலுவான கதாபாத்திரம் என்றாலும் ஒரு சில நேரங்களில் அந்த நடிகை காட்டிய கவர்ச்சிதான் அந்த வெப்சீரிஸ் ஹிட்டுக்கு காரணம் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதும் பாலிவுட்டுக்கு சென்று படங்கள் செய்வதில் ஆர்வமாக இருக்கும் அந்த நடிகையை விரைவில் மும்பையில் மிகப்பெரிய சொகுசு பங்களா ஒன்றை வாங்க ஆசைப்படுகிறாராம்.

அதற்காக கதைகூட கேட்காமல் படம் மற்றும் வெப்சீரிஸ் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகி கோடிகளில் அட்வான்ஸ் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறாராம். அவரது கணவரும் ஒரு நடிகர் என்பதால் அவரிடமும் தொடர்ந்து கேட்டு வருகிறார். ஆசை யாரை விட்டது, பணத்துக்காக நல்ல கதையை தேர்ந்தெடுக்காமல் விட்டு விரைவில் சினிமா மார்க்கெட்டை இழந்து விடுவார் எனவும் அக்கட தேசத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Trending News